பிரிகஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை

பூங்கோதை 2018-06-05 10:34:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிகஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ உள்ளூர் நேரப்படி ஜூன் 4ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிகஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் லின்டிவே சிசுலு இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார். மேலும், ரஷிய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரேசில் துணை வெளியுறவு அமைச்சர் மேர்கஸ் கால்வாவ் ஆகியோர் இதில் பங்கெடுத்தனர்.

வாங்யீ பேசுகையில், கடந்த 12 ஆண்டுகளாக, பிரிகஸ் நாட்டு ஒத்துழைப்பு அமைப்பு முறை மேன்மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அதன் அடிப்படை வலுப்படுத்தப்பட்டு, துறைகள் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, சர்வதேச விவகாரங்களில் நிலைப்புத் தன்மை மற்றும் செயலாக்கம் வாய்ந்த ஆற்றலாக, பிரிகஸ் நாட்டு ஒத்துழைப்பு மாறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்