கொரிய தீபகற்ப சூழ்நிலை பற்றி புதினின் கருத்து

பூங்கோதை 2018-06-06 10:25:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மாஸ்கோவிலுள்ள க்ரெம்ளின் மாளிகையில் சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் க்ரெம்ளின் மாளிகையில் சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், அண்மையில் சீன ஊடக குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியொங்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க-வட கொரியத் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு எதிர்பார்ப்பு தெரிவித்தார். மேலும், இப்பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கு ரஷியா முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின்

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின்

கொரிய தீபகற்ப பிரச்சினை குறித்து, புதின் பேசுகையில், ரஷியா மற்றும் சீனாவுக்கு ஒத்த நிலைப்பாடு உண்டு. இப்பிரச்சினையைத் தீர்க்கும் நெறிவரைபடத்தை இரு தரப்பும் முன்வைத்துள்ளன. அண்மையில், இப்பிரதேசத்தின் சூழ்நிலையைத் தணிவுப்படுத்தும் வகையில் சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ரஷியா ஆதரவு அளித்துள்ளது என்றார் அவர்.

மேலும், ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நிறுத்துவது என்ற வட கொரியாவின் முடிவுக்கு புதின் பாராட்டு தெரிவித்தார். இப்பிரதேசத்தின் பதற்றமான சூழ்நிலையை நீக்குவதற்கு வட கொரியா முன் எப்போதும் இல்லாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை என்ற நிலையை நோக்கி முக்கிய காலடி எடுத்து வைத்துள்ளது என்றும் புதின் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்