வறுமை ஒழப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சீனா விருப்பம்

2018-06-07 15:53:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வறுமை ஒழப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சீனா விருப்பம்

வறுமை ஒழப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சீனா விருப்பம்“வறுமை மற்றும் பட்டினியை அழித்து, உணவு உரிமையைப் பாதுகாப்பது” என்ற தலைப்பிலான கூட்டம், ரோமிலுள்ள ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்மைப்புக் கவுன்சிலின் 159ஆவது கூட்டத் தொடரின் போது, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

வறுமை மற்றும் பட்டினிக்கு எதிராக பல்வேறு நாடுகள் மேற்கொண்டுள்ள கொள்கைகள், எதிர்நோக்கியுள்ள அறைகூவல்கள் ஆகியவை பற்றி, சீனா, கென்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சீன அரசவையின் வறுமை நவாரண அலுவலகத்தின் துணைத் தலைவர் ஓவ் ச்சிங்பிங், சீனாவின் வறுமை ஒழிப்பு தொடர்பான அனுபவங்களை அறிமுகம் செய்தார். கடந்த 40 ஆண்டுகளில், சீனாவில் 70 கோடிக்கும் அதிகமான மக்கள் வறிய நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வளரும் நாடுகளுடன் இணைந்து வறுமை ஒழிப்பு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு,  இதற்கான சர்வதேச ஒத்துழைப்பை முன்னெடுக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது, உலகளவில், 78.3 கோடி மக்கள் இன்னமும் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்