கிம் ஜோங் உன்னுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புகள்ளது:டிரம்ப்

வான்மதி 2018-06-08 09:25:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் ஜப்பான் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே ஆகியோர் 7ஆம் நாள் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.

டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், வட கொரிய பிரச்சினை, அமெரிக்க-ஜப்பான் பொருளாதார மற்றும் வர்த்தகம் ஆகியவை இப்பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களாகும். வட கொரிய பிரச்சினை குறித்து அவர் பேசிய போது, அமெரிக்க-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு தடையின்றி நடைபெற்றால், அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள கிம் ஜொங் உன்னுக்கு அழைப்பை விடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். ஆனால், இருதரப்பும் உடன்படிக்கையை உருவாக்கும் முன், வட கொரியா மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்