ஏழு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு துவக்கம்

தேன்மொழி 2018-06-09 14:39:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஏழு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு துவக்கம்

ஏழு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு துவக்கம்

ஏழு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு ஜுன் 8-ஆம் நாள் கனடாவின் கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த ஷால்வா மாவட்டத்தில் துவங்கியது. இக்குழுவைச் சேர்ந்த அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

சகிப்புதன்மை வாய்ந்த பொருளாதார அதிகரிப்பு, ஆண்-பெண் சமம் மற்றும் மகளிருக்கு உரிமை வழங்குதல், உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பு, எதிர்கால வேலை வாய்ப்பு, காலநிலை மாற்றம், கடல் மற்றும் தூய்மை எரியாற்றல் ஆகிய 5 அம்சங்கள் இதில் விவாதிக்கப்படும். தவிர, வர்த்தகப் பிரச்சினையும் நடப்பு உச்சி மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்