ஜி7 உச்சி மாநாட்டில் கருத்துவேற்றுமைகள் அதிகம்

வாணி 2018-06-10 16:16:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜி7 உச்சி மாநாட்டில் கருத்துவேற்றுமைகள் அதிகம்

ஜி7 உச்சி மாநாட்டில் கருத்துவேற்றுமைகள் அதிகம்

7 நாடுகள் குழுவின் உச்சிமாநாடு 9ஆம் நாள் கனடாவில் நிறைவடைந்தது. இதில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால், 7 நாடுகளுக்கிடையிலே கருத்துவேற்றுமைகள் அதிகமாக்க் காணப்பட்டன.

இந்த உச்சி மாநாடு வெற்றி பெற்றுள்ளது என்றும், கூட்டறிக்கையை வெளியிடுவதற்கு 7 நாடுகளின் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் கனடா தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இம்மாநாட்டுக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில், வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் வலுவான கருத்துக்களைக் கூறியுள்ளதால், இப்பிரச்சினையில் 7 நாடுகள் குழு மேலதிக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்புக்காக உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதென 5 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், நெகிழியின் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி வாக்குறுதி அளிக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் விரும்பவில்லை. அதனால், அது தொடர்பான உடன்படிக்கையில் அவர்கள் கையொப்பமிடவில்லை என்றும் ட்ரூடோ கூறினார்.

இதனிடையில், 7 நாடுகள் குழுவின் கூட்டறிக்கையை அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்று அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜி 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின் சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில் அவர் தனது சுட்டுரை மூலம் இக் கருத்தை வெளியிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்