ஐ.நாவில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான உயர் நிலை கலந்தாய்வு

வாணி 2018-06-14 15:58:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான உயர் நிலை கலந்தாய்வு

ஐ.நாவில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான உயர் நிலை கலந்தாய்வு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு மற்றும் 2030 தொடர்வல்ல வளர்ச்சி பற்றிய நிகழ்ச்சி நிரல் தொடர்பாக நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் 13ஆம் நாள் உயர் நிலை கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ரஷியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐ.நா சுற்றுச்சூழல் அலுவலகம், சர்வதேச உழைப்பாளர் அமைப்பு, தெற்கு-தெற்கு ஒத்தழைப்பு அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என 200க்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டனர். ஐ.நா முதன்மை பொருளானர் எலியட் ஹாரிஸ் இதற்குத் தலைமை தாங்கினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுக்கோப்புக்குள், சுற்றுச்சூழல், உறைவிடம், குழந்தைகளின் உடல் நலம் முதலிய துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, ஐ.நாவின் பணிகளை முன்னேற்றி, தொடரவல்ல வளர்ச்சி இலக்கைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்