சீன-ஐ.நா அமைதி மற்றும் வளர்ச்சி நிதியத்தின் வழிகாட்டுப் பணியகத்தின் 3ஆவது கூட்டம்

இலக்கியா 2018-06-19 10:13:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஐ.நா அமைதி மற்றும் வளர்ச்சி நிதியத்தின் வழிகாட்டுப் பணியகத்தின் 3ஆவது கூட்டம், 14ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. உலகில் பங்காற்றி வரும் ஐ.நாவுக்கு ஆதரவு அளித்து, ஐ.நாவின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்துவது, சீனாவின் அடிப்படையான தூதாண்மைக் கொள்கைகளில் ஒன்றாகும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி மா ச்சோ ஷூ தெரிவித்தார்.

தற்போது சீன-ஐ.நா அமைதி மற்றும் வளர்ச்சி நிதியத்தின் கீழ், 30க்கும் மேலான திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மோதல்கள் தடுப்பு, ஐ.நாவின் அமைதி காப்பு பணியாளர்களின் பாதுகாப்பு நிலை மேம்பாடு, 2030ஆம் ஆண்டுக்குள் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கம் முதலியவற்றுக்கு இந்த நிதியம் முக்கியமான செல்வாக்கை ஏற்படுத்தும் என்று ஐ.நா தலைமை செயலாளர் அலுவலகத்தின் தலைவர் வியோடி கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்