துருக்கி:அமெரிக்கத் தயாரிப்புப் பொருட்கள் மீது வரி அதிகரிப்பு

இலக்கியா 2018-06-22 15:07:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்ட் 21-ஆம் நாள் தொடங்கி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, 26 கோடியே 70 இலட்சம் டாலர் வரியை அதிகரிக்க துருக்கி முடிவு செய்துள்ளது. துருக்கியின் எஃகு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளதற்குப் பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துருக்கியின் பொருளாதார அமைச்சகம் 21ஆம் நாள் அறிவித்தது.

இது தொடர்பான 22 வகை அமெரிக்கத் தயாரிப்புப் பொருட்களின் பட்டியலை துருக்கி, உலக வர்த்தக அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இப்பட்டியலில் நிலக்கரி, புகையிலை, அரிசி, மகிழுந்து, ஒப்பனை பொருட்கள், இயந்திங்கள் முதலியவை இடம் பெறுகின்றன.

இதற்கு முன்பு, துருக்கி உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது முறையே 25 விழுக்காடு, 10 விழுக்காடு சுங்க வரியை வசூலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது ஏற்கப்பட முடியாதது என்று துருக்கி அரசு தெரிவித்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்