“சீன குடியேறிகள் தினம்” பிரேசில் அறிவிப்பு

ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ஆம் நாளை “சீனக் குடியேறிகள் தின”மாகக் கொண்டாடுவதற்குரிய சட்ட உத்தரவில், பிரேசில் அரசுத் தலைவர் மிஷெல் டெமர் 26ஆம் நாள் கையெழுத்திட்டார். இது பற்றி டெமர் கூறியதாவது:
சீனக் குடியேறிகள் தினத்தின் உருவாக்கமானது, இருதரப்பு உறவின் அடிப்படையை வலுப்படுத்தி, மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
அதோடு, ஆக்ஸடு 15ஆம் நாள், சீன-பிரேசில் தூதரக உறவு நிறுவப்பட்டதன் நினைவு தினமாகும். இந்த தினம், இரு தரப்பு உறவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.