டிரம்பு அரசின் குடியேறுவோருக்கான தடுப்புச் சட்டம்
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பு, கடந்த ஆண்டில் வெளியிட்ட குடியேறுவோருக்கான தடுப்புச் சட்டம், அரசுத் தலைவர் அதிகார வரம்புக்கு ஏற்ப இயற்றப்பட்ட ஒன்று என்று அமெரிக்க உச்ச நீதி மன்றம் 26ஆம் நாள் தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்க அரசுத் தலைவர் பதவி ஏற்ற பிறகு, டிரம்பு அரசின் கொள்கை முடிவு மீது முதன்முறையாக வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு இதுவாகும்.
5 ஆதரவு வாக்குகள் மற்றும் 4 எதிர்ப்பு வாக்குகள் என்ற அடிப்படையில் உச்ச நீதி மன்றம் இத்தீர்ப்பினை அளித்துள்ளது.