சீன மத்திய ராணுவ ஆணையத் துணைத் தலைவரைச் சந்தித்த மேட்டிஸ்

மதியழகன் 2018-06-28 14:50:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மத்திய ராணுவ ஆணையத் துணைத் தலைவரைச் சந்தித்த மேட்டிஸ்

சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பெய்ஜிங்கில் சீன மத்திய ராணுவ ஆணையத் துணைத் தலைவர் சு ச்சிலியாங்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது, ஆசிய-பசிபிக் நிலைமை, தைவான் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி சு ச்சிலியாங் கூறுகையில்

வரலாற்று உண்மை, சீனாவின் இறையாண்மை மற்றும் நலன்கள் ஆகியவற்றை அமெரிக்கா மதிக்க வேண்டும். பரிமாற்றத்தையும் பேச்சுவார்த்தையையும் வலுப்படுத்தி, கருத்து வேறுபாடுகளைக் களைந்து, தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிலைப்புதன்மையைப் பேணிக்காக்க இரு தரப்பும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்