சீன-அமெரிக்க உறவுக்கான சாதனைகள்

2018-06-29 09:23:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மேட்டிஸ் 26ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, சர்வதேச மற்றும் பிரதேசத்தின் நிலைமை, இரு நாடுகள் மற்றும் இராணுவத்தின் உறவு, கொரிய தீபகற்பம், தைவான் மாநிலம், கடல் பாதுகாப்பு முதலிய பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், இரு நாடுகளின் இராணுவத்திற்கான பல்வகை நிலையிலான பரிமாற்றத்தை வலுப்படுத்துவது, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரிப்பது, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவது, அறைகூவல்களை கட்டுப்படுத்துவது முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர். மேட்டிஸின் இப்பயணத்தில், ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்று சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வூ ச்சியன் தெரிவித்தார்.

சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் ஹெ இவ்வாண்டுக்குள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்