தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான 8ஆவது உயர்நிலை பிரதிநிதிகளின் கூட்டம்

இலக்கியா 2018-06-30 15:48:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய வெளியுறவு பணி ஆணையத்தின் அலுவலகத் தலைவர் யாங் சியே ச்சு, 29ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் டர்பனில், பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான 8ஆவது உயர்நிலை பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். வரும் ஜுலை திங்கள் ஜோகன்ஸ்பேர்க்கில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு முன்னேற்பாடு செய்யும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது. சர்வதேச நிலைமை, பிரதேசங்களில் கவனம் ஈர்க்கும் பிரச்சினைகள், அமைதிப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு முதலியத் துறைகளில் பிரிக்ஸ் நாடுகளிடையேயுள்ள ஒத்துழைப்பு ஆகியவை குறித்து, பிரதிநிதிகள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, விரிவான முறையில் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்