அமெரிக்கா மீது ஈரான் எச்சரிக்கை

இலக்கியா 2018-07-01 16:10:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பொருளாதாரத் தடை நடவடிக்கை மூலம், ஈரானைப் பிளவுபடுத்த அமெரிக்கா செய்து வரும் முயற்சிகள் வீணானவை என்று ஈரான் தலைவர் காமெனி ஜுன் 30ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அமெரிக்காவும் அதன் கூட்டணியும் ஈரான் மீது விதித்துள்ள தடை நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில், ஈரான் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபடுவர் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா முன்பு ஏற்றுக்கொண்ட ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாகவும் ஈரானுக்கான தடை நடவடிக்கைகளை மீண்டும் துவக்குவதாகவும் அமெரிக்க அரசுத் தலைவர் டிராம்ப் மே 8ஆம் நாள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்