ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம்

பூங்கோதை 2018-07-07 15:07:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம்

ஜூன் 6ஆம் நாள் வியன்னாவில் நடைபெற்ற ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ கலந்து கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர்நிலைப் பிரதிநிதி ஃபெடரிகா மொக்ஹெரினி இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார். ஈரான், ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஐ.நா பாதுகாப்பு அவை ஈரான் அணு ஆற்றலுக்கான பன்முக உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைப் பின்பற்றி செயல்படுத்த வேண்டும். அமெரிக்கா, இவ்வுடன்படிக்கையிலிருந்து விலகி, ஒரு தரப்பாக தடை நடவடிக்கையை மேற்கொள்வது, தனது வாக்குறுதி மற்றும் சர்வதேசச் சட்டத்துக்குப் புறம்பானது. புதிய நிலைமையில், பல்வேறு தரப்புகள் பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, இவ்வுடன்படிக்கையைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்