ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய வாங்யீயின் 5 கருத்துக்கள்

பூங்கோதை 2018-07-07 15:09:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய வாங்யீயின் 5 கருத்துக்கள்

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்துக்குப் பிறகு, சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ சீனாவின் செய்தி ஊடகங்களால் பேட்டி காணப்பட்டார். ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை குறித்து, அவர் 5 கருத்துக்களை முன்வைத்தார்.

முதலாவதாக, சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக, இப்பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையைச் செயல்படுத்த வேண்டும். மூன்றாவதாக, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காக்க வேண்டும். நான்காவதாக, ஒரு தரப்பு தடை நடவடிக்கையைக் கைவிட வேண்டும். ஐந்தாவதாக, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வில் ஊன்றி நிற்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.

மேலும், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையைச் சீனா உறுதியாகப் பேணிக்காத்து, செயல்படுத்தி வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்புகளுடன் பரிமாற்றம் மற்றும் தொடர்பை நிலைநிறுத்தி, பல தரப்புகளின் சாதனைகளைப் பேணிக்காக்கும் வகையில் உரிய முயற்சிகளை மேற்கொள்ளச் சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்