அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர், 5 துறைகளில் பெரும் நலன்களை இழந்து விடும்

மதியழகன் 2018-07-08 15:23:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு மார்ச் முதல், சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சை மாறி மாறி  நிலவி வருகிறது. இத்தகைய வர்த்தகப் போர், சீன மற்றும் அமெரிக்க உறவு, உலகப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு பல உறுதியற்ற அபாயங்களை ஏற்படுத்தும். வர்த்தகப் போர் மூண்டால், இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

குறிப்பாக, அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுப்பது,  5 துறைகளில் பெரிய உள்ளார்ந்த நலன்களை இழக்கக் காரணமாகி விடும்.

முதலாவது, சீனாவும் அமெரிக்காவும், எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை இழக்கும்.

இரண்டாவது, உலகத் தொழில்களின் தொடர் சங்கிலி கொண்டு வரும் பெரும் நலன்களை இழக்க நேரிடும்.

மூன்றாவது, உலகம் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் சீரான வளர்ச்சியின் முக்கிய வரலாற்று வாய்ப்புகளை இழக்க வேண்டியதிருக்கும்.

நான்காவது, நீண்டகாலமாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச ஒழுங்குமுறை மற்றும் சர்வதேச விதிமுறை ஆகியவற்றின் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டுச் சக்தியை இழக்க வேண்டியதிருக்கும்.

ஐந்தாவது, சீனாவின் மாபெரும் சந்தை வாய்ப்புகளை அமெரிக்கா இழந்து விடும்.

வர்த்தகப் போருக்குப் பதிலாக, உயர் தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி,  எண்முறைப் பொருளாதாரம், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம்,  சீன-அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை ஆகிய 5 துறைகளில் அமெரிக்கா ஆக்கமுடன் செயல்பட்டால், சீன-அமெரிக்க வர்த்தகம் மேலும் பெரிய அளவில் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்