8வது சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்கில் லீ கெச்சியாங் உரை

பூங்கோதை 2018-07-08 17:11:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

8வது சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்கில் லீ கெச்சியாங் உரை

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 16 நாடுகளின் தலைவர்களுடன், ஜூலை 7ஆம் நாள் பல்கேரியாவில் நடைபெற்ற 8வது சீனா-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் லீ கெச்சியாங் ஆற்றிய உரையில், “16+1 ஒத்துழைப்பு”, சர்வதேச நடைமுறை விதிமுறை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டக் கட்டுக்கோப்பை எப்போதும் பின்பற்றி, பிற நாடுகளைத் தனிமைப்படுத்தாமல் சந்தைமயமாக்கத்தில் ஊன்றி நின்று வருகிறது. வெளிப்படை, திறப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு பெரிய மேடையாக இது திகழ்கிறது. சீனா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான உறவின் வளர்ச்சிக்கு, “16+1 ஒத்துழைப்பு” புதிய இயக்காற்றல் ஊட்டும் அதேவேளையில், சீன-ஐரோப்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவையும் முன்னேற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு மாறாது. சந்தைமயமான சீர்திருத்தத்தின் திசை மாறாது. வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவுபடுத்தும் மனவுறுதி மாறாது என்றும் லீ கெச்சியாங் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்