வட கொரிய-அமெரிக்க உயர் நிலை பேச்சுவார்த்தை

வான்மதி 2018-07-08 17:16:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வட கொரியாவில் பயணம் மேற்கொண்ட போது இருநாடுகளின் உயர் நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மை, போர் முடிவுக்கான அறிக்கை உள்ளிட்டவை பற்றி அமெரிக்க தரப்பு வெளிப்படுத்திய மனப்பான்மை மற்றும் நிலைப்பாடு குறித்து, வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 7ஆம் நாள் வருத்தம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் பல பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தும் அதேவேளை நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாக வட கொரியா தெரிவித்திருந்தது. ஆனால், ஒரு சார்பான அணு ஆயுதமின்மை என்ற கோரிக்கையை அமெரிக்கா விடுத்ததோடு, கொரிய தீபகற்ப அமைதி முறைமையின் உருவாக்கம் பற்றியும் குறிப்பிடவில்லை. இருதரப்புகளின் ஒத்த கருத்துக்கு வந்த போர் முடிவுக்கான அறிக்கை தொடர்பான பிரச்சினை பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது என்று இச்செய்தித் தொடர்பாளர் கூறியதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் 7ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி, பியோங்யாங்கை விட்டுப் புறப்படும் முன் பாம்பியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், வட கொரிய அதிகாரிகளுடன் பயன்மிக்க பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும், கிட்டத்தட்ட அனைத்து மையப் பிரச்சினைகளிலும் இருதரப்பும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்