ஐ.நா:ஆயுத மோதலில் குழந்தைகளின் பாதுகாப்புக்கான தீர்மானம்

இலக்கியா 2018-07-10 10:03:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா பாதுகாப்பவை 9ஆம் நாள் தீர்மானம் ஒன்றை ஏற்று, ஆயுத மோதலில் குழந்தைகளைப் படையில் சேர்ப்பது, குழந்தை படையினரைப் பயன்படுத்துவது, குழந்தைகளைக் கொலை செய்வது, குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, கடத்திச் செல்வது, முதலிய சர்வதேசச் சட்டத்தை மீறிய நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளது.

குழந்தைகள் மீது இனப் படுகொலை குற்றம், மனித உரிமை மீறல் குற்றம், போர் குற்றம் முதலியவற்றை நிகழ்த்தியவர்கள் மீது விசாரணை மற்றும் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று இத்தீர்மானம், ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டில் மோதலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மொத்தம் 21 ஆயிரம் குழந்தைகளின் மீது உரிமை மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்