சீன-அரபு நாடுகள் இடையேயான நெடுநோக்குக் கூட்டுறவின் உருவாக்கம்

மதியழகன் 2018-07-10 16:00:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அரபு நாடுகள் இடையேயான நெடுநோக்குக் கூட்டுறவின் உருவாக்கம்

சீனா-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர்கள் நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.

எதிர்காலத்தை நோக்கி, விரிவான ஒத்துழைப்பு, கூட்டு வளர்ச்சி ஆகியவற்றை உள்ளிட்டக்கிய தொலைநோக்குக் கூட்டுறவை உருவாக்க சீனாவும் அரபு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார்.

அவரது இக்கூற்று, சீன-அரபு நாடுகள் உறவின் புதிய திசையைத் தெளிவுப்படுத்தியுள்ளது. இரு தரப்பு நட்புறவின் புதிய வரலாற்றின் துவக்கமாக மாறியுள்ளது. மேலும், அரபு நாடுகளுடனான திட்டங்களின் இணைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னெடுத்து, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக, ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சீனாவும் அரபு நாடுகளும்,  பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வுக் கோட்பாட்டைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு நவம்பர் திங்கள் சீனாவின் ஷாங்காயில் நடைபெறவுள்ள முதலாவது இறக்குமதிப் பொருட்காட்சியில் அரபு நாடுகள் பங்கெடுப்பதற்கு ஷிச்சின்ங் வரவேற்பு தெரிவித்தார். சீனா மற்றும் அரபு நாடுகளின் உணர்வு மற்றும் கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுக்கும் விதமாக பல புதிய நடவடிக்கைகள், சீன-அரபு செய்தி மையத்தின் உருவாக்கம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார்.

பட்டுப் பாதையின் குறிக்கோளை நிறைவேற்றி, இலக்கினை நோக்கிச் சென்று உறுதியான காலடியை எடுத்து வைத்து, சீனா மற்றும் அரபு உலகின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் வகையில், சீனாவும் அரபு நாடுகளும் கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில், அரபு லீக் அமைப்பின் பொதுச் செயலாளர்  அஹ்மது அபௌவ்ல் ஹெய்த் கூறுகையில்,

சர்வதேச அரங்கில், அரபு நாடுகளின் கூட்டாளியாக, சீனா எப்போதும் விளங்கி வருகிறது. இரு தரப்புகளுக்கிடையே வரலாறு, பண்பாடு மற்றும் நட்புப் பரிமாற்றம் நீண்டகாலமாகக் காணப்பட்டு வருகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றிலான ஒத்துழைப்பையும் வளர்ச்சியையும் தூண்டுவதை, அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்தார்.

நடப்புக் கூட்டத்தில், சீனா, அரபு லீக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் என சுமார் 300பேர் பங்கேற்றுள்ளனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை கூட்டாக செயல்படுத்துதல், அமைதியான வளர்ச்சியைக் கூட்டாக தூண்டுதல், புதிய யுகத்தில் சீன-அரபு உறவை முன்னேற்றுதல் என்பது, அதன் தலைப்பாகும்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்