நேட்டோ உச்சி மாநாட்டில் உடன்பாடு

இலக்கியா 2018-07-12 09:46:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேட்டோ தலைமைச் செயலாளர் ஸ்டோல்டன்பர்க் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அன்று நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் 29 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது, பயங்கரவாத ஒழிப்பு, நேட்டோவின் திறன் மற்றும் தற்காப்பு ஆற்றல் அதிகரிப்பு முதலியவை குறித்து, உடன்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இவ்வாண்டில் நேட்டோவின் 8 உறுப்பு நாடுகளின் ராணுவச் செலவு, உறுப்பு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2 விழுக்காடு வகிக்கும் இலக்கை நனவாக்கும் என்று ஸ்டோல்டன்பர்க் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஈராக்கில் புதிய கடமைகளை மேற்கொள்வதாகவும், பயங்கரவாத எதிர்ப்பில் ஜோர்டானுக்கும் துனீசியாவுக்கும் அளித்திருந்த ஆதரவை அதிகரிப்பதாகவும் நேட்டோ முடிவு எடுத்துள்ளது என்று ஸ்டோல்டன்பர்க் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்