நேட்டோ உறுப்பு நாடுகள் பாதுகாப்புச் செலவை அதிகரிக்க:அமெரிக்கா

இலக்கியா 2018-07-12 09:47:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேட்டோ உறுப்பு நாடுகள், தங்களின் ராணுவப் பாதுகாப்புச் செலவை, உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் 2 விழுக்காடாக அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 11ஆம் நாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்ப் அன்று நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். தற்போது நேட்டோவின் 29 உறுப்பு நாடுகளில் 5 நாடுகளின் பாதுகாப்புச் செலவு இந்த வரையறையை எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல், ராணுவப் பாதுகாப்புச் செலவுப் பிரச்சினை குறித்து, நேட்டோவின் கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்கா பல முறை நிர்ப்பந்தம் திணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்