ஷீ ச்சின்பிங்-யுனேஸ்கோ தலைமைச் செயலாளர் சந்திப்பு

2018-07-16 19:34:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷீ ச்சின்பிங்-யுனேஸ்கோ தலைமைச் செயலாளர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 16ஆம் நாள் பெய்ஜிங்கிற்கு முதன்முறையாக வருகை புரிந்துள்ள யுனேஸ்கோ அமைப்பின் பொதுச் செயலாளர் அசுலெய் அம்மையாரை வரவேற்று, அவருடன் கலந்துரையாடினார்.  

தற்போதைய உலகில், பன்னாட்டு மக்களின் தலைவிதி மென்மேலும் நெருக்கமாக இணைந்துள்ளது. புதிய நூற்றாண்டில் நுழைந்துள்ள சீனா ஒரு புறம், கல்வி, பண்பாடு, மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றை வளர்த்து, மக்களின் நாகாரீக பண்புகளையும் உயர்த்தி வருகின்றது. மறு புறம், பன்னாட்டுப் பண்பாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, பரிமாற்றம் மேற்கொள்வதைச் சீனா முன்மொழிந்துள்ளது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, பன்னாடுகளின் கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்தும் அதே வேளையில், உலக மக்களிடையேயான தொடர்பையும் விரைவுபடுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்