அமெரிக்க-ரஷிய அதிபர்களின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது:கூட்டு பேட்டி

சரஸ்வதி 2018-07-17 09:07:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், 16ஆம் நாள் பிற்பகல், பின்லாந்தில், ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க அரசுத் தலைவராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, இரு தரப்பினருக்கிடையில் பேச்சுவார்த்தை நடப்பது இதுவே முதன்முறை.

இப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இருவரும் தெரிவித்தனர்.

இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருவரும் இப்பேச்சுவார்த்தையின் சாதனைகளை எடுத்துக்கூறி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல், கொரியத் தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை, பயங்கரவாத எதிர்ப்பு, ஈரான் பிரச்சினை, சிரிய நிலைமை முதலிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். மேலும், இரு தரப்பு பேச்சுவார்த்தை மனநிறைவு அளிப்பதாகவும், ஒரு பேச்சுவார்த்தையின் மூலம், இரு நாடுகளுக்கிடையில் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்றாலும், இது சரியான திசையை நோக்கி எடுத்து வைத்த முதல் காலடி என்றும் புதின் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்