கூடுதல் சுங்கவரி அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு பாதிப்பு

வான்மதி 2018-07-18 12:55:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கூடுதல் சுங்கவரி அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு பாதிப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தை வலுப்பட்டு வருகிறது. பணவீக்க விகிதம் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் இலக்கை நெருங்கி வருகிறது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்ளும் வாய்ப்பு மற்றும் இடர்பாடு சரிசம நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் படிப்படியாக வட்டி விகிதத்தை அதிகரிப்பது என்பது தற்போதைய தலைசிறந்த கொள்கை தெரிவாகும் என்று ஃபெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பாவெல் 17ஆம் நாள் தெரிவித்தார்.

பெரும் கவனத்தை ஈர்த்து வரும் வர்த்தகப் பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், தற்போதைய வர்த்தகக் கொள்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி மதிப்பீடு செய்துவது கடினம். ஆனால், நீண்டகாலத்துக்கு தொடரும் உயர் சுங்கவரி பொருளாதாரத்துக்குப் பாதகமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் உழைப்பு உற்பத்தி விகிதமும் ஏற்றுமதியும் உலகின் முன்னணியில் உள்ளன. சுங்கவரி உயர்வு அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்