பிரிக்ஸ் நாடுகளின் 3ஆவது ஊடக கருத்தரங்கு

சரஸ்வதி 2018-07-19 10:47:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் 3ஆவது ஊடக கருத்தரங்கு 18ஆம் நாள், தென்னாப்பிரிக்காவில் துவங்கியது. இதில் பிரிக்ஸ் நாடுகளின் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்தையும் உள்ளடக்கும் நேர்மையான உலக ஒழுங்கை உருவாக்கும் பின்னணியில், ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற தலைப்பில், ஆய்வு செய்து விவாதித்தனர். பிரிக்ஸ் நாடுகளின் ஊடகங்களுக்கிடையில் நட்பார்ந்த பரிமாற்றம் மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்பது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

இக்கருக்கரங்கின் செயல் தலைவரும், சின்குவா செய்தி நிறுவனத்தின் தலைவருமான சை மிங் சௌ, தலைமையேற்று துவக்க உரையாற்றினார். தகவல்களின் பகிர்வு, மக்களின் தொடர்பு, பிரிக்ஸ் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமை ஆகியவற்றை வலுப்படுத்துவதில், பிரிக்ஸ் நாடுகளின் ஊடகங்கள் முக்கிய பொறுப்புடன், சிறப்பு பங்காற்றி வருகின்றன. மேலும், பிரிக்ஸ் நாடுகளின் ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி செய்தி அறிக்கைகளின் மூலம் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்