சீனா மீது டிரம்ப் அரசு தொடுத்த வர்த்தகப் போர் நியாயமற்றது!

மதியழகன் 2018-07-19 15:37:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா மீது டிரம்ப் அரசு தொடுத்த வர்த்தகப் போர் நியாயமற்றது!

சீனா மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தொடுத்த வர்த்தகப் போர், நீதியற்றதாகவும் நியாயமற்றதாகவும் உள்ளது என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ச்சுய் தியன்காய் 18ஆம் நாள் “யுஎஸ்ஏ டடேய்”என்ற இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தார்.

சீனாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு பெரிய நிதிப் பற்றாக்குறை உள்ளதை முக்கிய காரணமாக கொண்டு, அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுத்துள்ளது. உண்மையில், இந்த நிதிப் பற்றாக்குறை, பொருளாதார உலகமயமாக்கத்தில் சந்தை வளங்களின் பங்கீட்டின் விளைவு ஆகும்.  மேலும், அமெரிக்காவில் மக்களின் பணச் சேமிப்பு குறைவு ஆனால் செலவு அதிகம், முக்கிய சர்வதேச சேமிப்பு நாணயமான அமெரிக்க டாலரின் பயன்பாடு ஆகிய காரணிகளும், அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை நிலையை ஏற்படுத்தியது. மேலும், சீனாவுக்கான ஏற்றுமதியை அமெரிக்கா நீண்டகாலமாக கட்டுப்படுத்தி வருவதால், நிதிப் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளது என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல உண்மைகளைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க அரசு வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்கப் போவதில்லை. அமெரிக்காவின் செயல்பாடு, தனக்கும் பிறருக்கும் தீங்குகளை விளைவித்து, உலகிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்