அமெரிக்காவைத் தொடர்ந்து சார்ந்திருக்கக் கூடாது:மெர்கல்

வாணி 2018-07-21 16:18:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பசிபிக் பெருங்கடலைக் கடந்த உறவு மாபெரும் சிக்கல்களைச் சந்திக்கும் போது ஜெர்மனி தொடர்ந்து அமெரிக்காவுடன் ஒத்துழைக்க விரும்புகின்றது என்று ஜெர்மன் தலைமை அமைச்சர் ஏஞ்சலா மெர்கல் அம்மையார் 20ஆம் நாள் தெரிவித்தார். அதேசமயம், ஐரோப்பா தொடர்ந்து அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் போரினால் உலகப் பொருளாதார நிலைமை சிக்கலாக மாறிவிடும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான வாகனச் சுங்க வரி பிரச்சினை பற்றி டிரம்புவுடன் விவாதிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜுங்கர் அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்