ரஷிய மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் பரிமாற்றம்

தேன்மொழி 2018-07-22 15:27:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்ப்போவால் ஆகியோர், இரு நாட்டுறவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, 21-ஆம் நாள், தொலைப்பேசி மூலம் ஆலோசனை நடத்தினர்.

சிரியா மற்றும் அதன் சுற்றுப்புறப் பிரதேசங்களின் நிலைமை, சிரியாவின் மனித நேய உதவிக்கான தொடர்புடைய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு முதலியவை குறித்தும், இரு தரப்பினரும் விவாதித்தனர். தவிர, கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மை போக்கைத் தூண்டுவது பற்றியும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

ரஷிய மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் பரிமாற்றம்

ரஷிய மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் பரிமாற்றம்

இதனிடையில், ரஷிய அரசுத் தலைவர் புதினுக்கு இவ்வாண்டின் இலையுதிர்காலத்தில் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு அலுவலுக்குப் பொறுப்பேற்றுள்ள  அமெரிக்க அரசுத் தலைவரின் உதவியாளர் ஜான் போல்டன் அழைப்பு விடுக்க வேண்டும் என்று டொனல்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை 19-ஆம் நாள் தெரிவித்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்