தென் ஆப்பிரிக்காவில் பெய்ஜிங் வாகனத் தொழில் குழுமத்தின் பங்குகள்

சிவகாமி 2018-07-24 15:36:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென் ஆப்பிரிக்காவில் பெய்ஜிங் வாகனத் தொழில் குழுமத்தின் பங்குகள்

ஆப்பிரிக்காவின் தொழிற்துறை மயமாக்க மற்றும் வேளாண் நவீன மயமாக்க வளர்ச்சிப் போக்கை ஆதரிக்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், 2015ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாளன்று தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற சீன- ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் சீனாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான பத்து பெரிய ஒத்துழைப்புத் திட்டங்களை முன்வைத்தார். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பெய்ஜிங் வாகனத் தொழில் குழுமும் தென் ஆப்ரிக்கத் தொழில் வளர்ச்சிக் கூட்டு நிறுவனமும் கையொப்பமிட்டுள்ளன.

பெய்ஜிங் வாகன தொழில் குழுமத்தின் தென் ஆப்பிரிக்க தொழிற்சாலை, தென் ஆப்ரிக்காவிலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் சீனத் தொழில் நிறுவனம் மிக அதிகமாக முதலீடு செய்துள்ள வாகனத் தொழிற்சாலையாகும். தென் ஆப்ரிக்காவின் தொழிற்துறை மயமாக்க நிலையை உயர்த்தும் வகையில், இத்தொழிற்சாலை வலிமையான ஆதரவுகளை வழங்கி வருகிறது.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்