உள்நாட்டு விவசாயிகளுக்கு 1200 கோடி அமெரிக்க டாலர் உதவித் தொகை:அமெரிக்கா அறிவிப்பு

வாணி 2018-07-25 19:17:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவையுடனான வர்த்தகப் போரில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 1200 கோடி டாலர் உதவித் தொகை வழங்குவதாக அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பு 24ஆம் நாள் அறிவித்தார்.

ஆனால், அதன் வர்த்தக்க் கூட்டாளிகளின் மீது வர்த்தகப் போரை தொடுத்ததற்கான காரணங்களுள் ஒன்றாக, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அந்தந்த நாடுகள் உதவித் தொகை வழங்கியது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது என்பது மக்களின் நினைவில் வந்துள்ளது.

இது, வர்த்தகத் துறையில் அமெரிக்கா மீண்டும் இரட்டை வரையறையைப் பயன்படுத்துவதைக் காட்டுகின்றது.

பெரும் மானிய தொகை பிரச்சினையை உண்மையாகத் தீர்க்க முடியுமா?

இது பற்றி அமெரிக்காவின் சுயேச்சை வர்த்தகத்துக்கான பண்ணையாளர்கள் அமைப்பின் நிர்வாகத் தலைவர் புரேன் கியூயர் கூறுகையில்,

உதவித் தொகைக்குப் பதிலாக அமெரிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு உடன்படிக்கைகள் தேவைப்படுகின்றது. உடன்படிக்கைகள் இருந்தால் தான், எதிர்கால திட்டத்தை கவலையின்றி வகுக்கலாம் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்