சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா எதிர்ப்பு

வான்மதி 2018-07-28 15:11:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா எதிர்ப்பு

சீனப் பொருளாதார மாதிரி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை உலக வர்த்தக அமைப்புக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் சியாங்சென் 26ஆம் நாள் இவ்வமைப்பின் பொது மன்றக் கூட்டத்தில் மறுத்துரைத்தார்.

அவர் பேசுகையில், அமெரிக்கப் பிரதிநிதி தனது உரையில் சீனப் பொருளாதாரத்தின் சந்தையற்ற தன்மை என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால் சந்தைப் பொருளாதாரம் பற்றி உலக வர்த்தக விதிகளில் விளக்கம் ஏதுமில்லை. சந்தைப் பொருளாதாரம் என்று உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எந்த வரையறையும் இல்லை. தற்போது உலக வர்த்தக அமைப்பு முன்கண்டிராத சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பைச் சாக்குப்போக்காகக் கொண்டு எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கையும், உள்நாட்டு சட்டத்தின்படி அது ஒருசார்பாக மேற்கொண்டுள்ள கூடுதல் சுங்கவரி விதிப்பு நடவடிக்கையும் உண்மையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்று தெரிவித்தார்.

பலதரப்பு வர்த்தக அமைப்பு முறை உலகமயமாக்கத்துக்கு இணங்க செயல்படச் செய்வதில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற விரும்புகிறது. ஆனால் ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்பு வாதத்தின் பரவலைத் தடுப்பது என்பது, உலக வர்த்தக அமைப்பின் தற்போதைய அவசிய கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டத்துக்குப் பின் ஊடகங்களில் பேசிய ட்சாங் சியாங்சென், அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர் காரணமாக, உலகளவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் உறுதியான எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்