சீன அரசுத் தலைவரின் வெற்றிகரமான பயணம்

வான்மதி 2018-07-29 15:43:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவரின் வெற்றிகரமான பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 19 முதல் 29ஆம் நாள் வரை ஐக்கிய அரபு அமீரகம், செனெகல், ருவாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் 10ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்று, நாடு திரும்பும் வழியில் மொரீஷியஸ் நாட்டிலும் நட்புப் பயணம் மேற்கொண்டார். இப்பயணம் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், வளரும் நாடுகள் மற்றும் புதிய சந்தை வாய்ப்பு உள்ள நாடுகளுடன் நெடுநோக்கு ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்தும் விதமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகரமான பயணமாக இது அமைந்தது என்று குறிப்பிட்டார்.

11 நாட்கள் தொடர்ந்த இப்பயணத்தின் போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சுமார் 60 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன அரசுத் தலைவரின் வெற்றிகரமான பயணம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பயணம் மேற்கொண்டது இதுவே முதன்முறை. இப்பயணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாடத்தக்க சிறப்பு நிகழ்ச்சியாக திகழ்ந்தது என்று வாங்யி தெரிவித்தார்.

கடினமான நிலையில் சிக்கியுள்ள மத்திய கிழக்கு பிரதேசத்தின் நிலைமை குறித்து அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பேசுகையில், பிரதேசத்தின் நடைமுறைக்கு இணங்க, பல்வேறு தரப்புகளின் நலன்களைக் கருத்தில் கொள்ளும் தீர்வு காண வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். இது உலகளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்று வாங்யி கூறினார்.

சீன-ஆப்பிரிக்க உறவுக்கு ஷிச்சின்பிங் முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், இவ்வாண்டு சீன-ஆப்பிரிக்க உறவின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டாகும். இந்தப் பயணத்துக்குப் பிறகு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாடு செப்டம்பரில் நடைபெற உள்ளது. அப்போது இருதரப்பு பன்முக ஒத்துழைப்புக்கான புதிய தொலைநோக்குத் திட்டம் முன்வைக்கப்படும் என்றும் வாங்யி தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவரின் வெற்றிகரமான பயணம்

தவிரவும், கடந்த சில ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிப் போக்கு சீராகி இருப்பதோடு, சர்வதேச விவகாரங்களில் பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. நடப்பு உச்சிமாநாடு பற்றி வாங்யி கூறுகையில், தாராளப் பொருளாதார முறைமையை உருவாக்கி, ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்பு வாதத்தை தெளிவாக எதிர்க்கவும், சர்வதேச புத்தாக்க ஒத்துழைப்பை ஆழமாக்கி, மரபுவழி தொழில்களுக்கு தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை நீக்கவும், பலதரப்பு வாதத்தைப் பின்பற்றி பலதரப்பு வர்த்தக முறைமையை ஆதரித்து, சர்வதேச விதிமுறையைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்று அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் வேண்டுகோள் விடுத்தார். அவரது கருத்துக்கள், பிரிக்ஸ் அமைப்பின் குறிக்கோளுக்குப் பொருத்தமாக உள்ளன. வளரும் நாடுகளின் ஒருமித்த விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளன என்று வாங்யி குறிப்பிட்டார்.

சீன அரசுத் தலைவரின் வெற்றிகரமான பயணம்

மேலும், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இந்தப் பயணம், புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய பெரிய நாட்டின் தூதாண்மைக்கு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது என்றும் அவர் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்