வேளாண்மை விவகாரத்தில் ஐரோப்பா அமெரிக்காவுக்கு உதவி அளிக்குமா?

மதியழகன் 2018-07-29 16:15:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்டத்தில், தண்டனை ரீதியிலான புதிய சுங்க வரி விதிக்கப் போவதில்லை என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்டு டிரம்பும், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கரும் ஜுலை 25ஆம் நாள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவை அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து 26ஆம் நாள், பெரிய வேளாண் மாநிலமான அயோவா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், அமெரிக்க விவசாயிகளுக்கு ஐரோப்பாவின் கதவைத் திறந்து வைத்துள்ளோம். உங்களுக்கு ஒரு பெரிய சந்தை கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால், அதே நாளில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் பிரதிநிதி ராபர்ட் லைட்திசேர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வேளாண் விவகாரம் பற்றி விவாதித்து வருகின்றோம் என்று உறுதியாக கூறினார்.

இது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி குறிப்பிடுகையில், வேளாண்மை, பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி அல்ல. அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள் தான் என்று தெரிவித்தார்.

வேளாண்மை விவகாரத்தில் ஐரோப்பா அமெரிக்காவுக்கு உதவி அளிக்குமா?

கூடுதலாக, பிரான்ஸ் அரசுத் தலைவர், ஸ்பெயன் தலைமை அமைச்சர் ஆகியோரின் கருத்து, டிரம்பின் கூற்றுக்கு புறம்பானது.

வேளாண்மை விவகாரம் தொடர்பாக, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படுவது ஏன்?

உண்மையில், வேளாண்மை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கடும் எதிரெதிர் நிலை நிலவுகிறது. அதனால், அட்லாண்டிக் பெருங்கடல் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை இறுதியில் தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

டிரம்ப் முன்வைத்துள்ள பூஜியம் சுங்க வரி உள்ளிட்ட வர்த்தக பேச்சுவார்த்தையில் வேளாண் துறையைச் சேர்க்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் மறுத்துள்ளனர். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் அதைத் தொடர்ந்து முன்னெடுக்க வாக்குறுதிக் கூறியுள்ளது.

இருப்பினும், சீனா மீது வர்த்தகப் போர் தொடுத்ததால் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள சோயா பீன் தேக்க நிலையைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியுமா? என்ற இந்த கேள்விக்கு புலூம்பர்க் நிறுவனம் முடியாது என்று பதில் அளித்துள்ளது. ஐரோப்பிய சந்தை, அமெரிக்க சோயா பீன் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல தேர்வு ஆகும். சீனச் சந்தையை விட, ஐரோப்பிய சந்தை குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டில் சீனா, அமெரிக்காவில் இருந்து 1230 கோடி டாலர் சோயா பீன்களை இறக்குமதி செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தொகை, 160 கோடி டாலர் மட்டும்.

டிரம்ப் அரசு சீனா மீது வர்த்தகப்போர் தொடுத்ததால், சீனா மேற்கொண்டுள்ள பதிலடி நடவடிக்கைகள், அமெரிக்க விவசாயிகளுக்கும் ஏற்படுத்திய இழப்பு, உள்நாட்டில் டிரம்புக்கு விதிக்கப்பட்ட அரசியல் அழுத்தம் ஆகிய பிரச்சினைகளை, ஐரோப்பா  தணிக்க முடியாது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்