லாவோஸ் நாட்டில் அணைக்கட்டு விபத்தில் 9 பேர் பலி

வான்மதி 2018-07-30 16:18:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லாவோஸின் அட்டபேயு மாநிலத்தில் அணைக்கட்டு உடைந்த விபத்தில் உயிரிந்த நபர்களில் இன்னொருவரின் சடலம் கண்டறியப்பட்டது. தற்போது வரை இவ்விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 122 பேர் காணாமல் போயினர் என்று அம்மாநில அரசு 29ஆம் நாள் உறுதிப்படுத்திக் கூறியது.

இவ்விபத்தின் காரணமாக, சனாமெக்சி மாவட்டத்தின் 13 ஊர்களைச் சேர்ந்த 13000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீட்புதவிப் பணி சீராக நடைபெற்று வருகிறது. சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த மீட்புதவிக் குழுக்களும் தன்னார்வத் தொண்டர்களும் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அன்றிரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்