பெய்ஜிங்கில் சீன-பிரிட்டன் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை

மதியழகன் 2018-07-30 19:15:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான 9ஆவது நெடுநோக்குப் பேச்சுவார்த்தை ஜுலை 30ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியும், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜெரேமே ஹண்டும் இப்பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினர். இதில், இரு தரப்புறவில் நெடுநோக்குத்தன்மையான உள்ளடக்கங்களை அதிகரிக்கவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை ஆதாரமாகக் கொண்டு இரு தரப்புகளுக்கிடையே பயனுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும், உலகின் தடையற்ற வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும், இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன. பலதரப்பு வாதத்தின் முன்னேற்றப் போக்கு, உலகின் தடையில்லா வர்த்தக அமைப்புமுறை மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறை ஆகியவற்றைப் பேணிக்காக்க சீனாவும் பிரிட்டனும்,சர்வதேச சமூகத்துடன் இணைந்துத் தொடர்ந்து பாடுபடும் என்று வாங்யீ பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தவிரவும், சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை, சீனாவில் திட்டமிடப்பட்டுள்ள தேசியக் கொள்கையாகும். எதிர்-எதிர் என்ற வழிமுறைக்குப் பதிலாக, பேச்சுவார்த்தை மூலமாக வர்த்தகச் சர்ச்சையைத் தீர்ப்பது சீனாவின் நிலைப்பாடாக விளங்குகிறது. அதுவே பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய சரியான வழியாகும். சமத்துவம், மதிப்பு அளித்தல், விதிகளைக் கடைப்பிடித்தல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் சீனா பேச்சுவார்த்தை நடத்தும் என்று வாங்யி குறிப்பிட்டார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக ஜெரேமே ஹண்ட பதவியேற்ற பிறகு, ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அவர் பயணம் செய்த முதல் நாடாக சீனா இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்