ஆப்கானிஸ்தானில் 2 குண்டுவெடிப்பு நிகழ்வுகள்

2018-08-01 10:00:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தானில் 31ஆம் நாள் 2 குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அன்று காலை ஹேரத்-காபுல் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்தனர் என்றும், இவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்று உள்ளூர் காவல் நிலையச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதே நாள் நான்கர்ஹார் மாநிலத்தில் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்பு, ஆயுததாரிகள் மற்றும் காவற்துறையினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்