வர்த்தகப் போரில் அமெரிக்காவின் தந்திரம்

மதியழகன் 2018-08-01 19:46:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

4 மாதங்களுக்கும் மேலாக நீடித்துள்ள சீன-அமெரிக்க வர்த்தக இழுபறிப் போட்டியில் புதிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் நுசின், சீனத் துணைத் தலைமை அமைச்சர் லீயு ஹெ ஆகியோரின் பிரதிநிதிகள், சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தும் விதமாக, தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர் என்று புலூம்பர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேசயமத்தில், 1,600 கோடி டாலர் சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை ஆகஸ்டு முதல் தேதி முதல் அமலுக்கு வரக் கூடும். தவிரவும், 2,0000 கோடி டாலர் சீனப் பொருட்கள் மீது 25 விழுக்காட்டு சுங்க வரி விதிக்கும் முடிவை அமெரிக்கா கருத்தில் கொண்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருபுறம், அமெரிக்கா, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அறிகுறியை வெளிக்காட்டியுள்ளது. மறுப்புறம், சுங்க வரியை உயர்த்தும் அச்சுறுதலை விடுத்துள்ளது. இந்த பார்வையில், பிரச்சினையைத் தீர்க்கும் உள்ளார்ந்த விருப்பம் அமெரிக்காவுக்கு இல்லை. இந்த தந்திரம் மூலம் மேலதிக நன்மை பெறுவது அதன் இலக்கு ஆகும்.

ஜுலை 6ஆம் நாள், அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுத்த பிறகு, பேச்சுவார்த்தையையும் வர்த்தகப் போரையும் கூட்டாக  நடத்துவது என்ற அமெரிக்காவின் தந்திரத்தில் மூன்று சூழ்ச்சிகள் மறைந்திருக்கின்றன.

முதலில், சீனா மீது வர்த்தகப் போர் தொடுத்ததில் எந்த உடனடியான முன்னேற்றமும் காணப்படவில்லை என்று கவலைப்பட்ட டிரம்ப்,  தீவிரமான வழிமுறையில் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறது.

கடந்த 4 மாதங்களில், டிரம்ப் அரசு அடுத்தடுத்து தனது வர்த்தக நடவடிக்கையை தீவிரமாக்கி வருகிறது.

இரண்டாவதாக, அமெரிக்காவின் உள்நாட்டில், வர்த்தகப் போருக்கு எதிரான குரல் அதிகரித்து வருகிறது.  டிரம்ப் அரசு உள்நாட்டில் எழுந்துள்ள அரசியல் அழுத்தத்தை இடமாற்ற முயல்கிறது.

தற்போது, சுங்க வரி மற்றும் வர்த்தகப் போரின் நிழலில்,  அமெரிக்காவின் சில பெரிய நிறுவனங்கள் அழுத்தங்களை உணர்ந்துள்ளன. வர்த்தகப் போரில் ஏற்பட்டுள்ள செலவு உயர்வு இறுதியில் நுகர்வோருக்கு கொண்டு வரப்படும் என்று பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசியல் மற்றும் பொருளாதாரம் ரீதியிலான இரண்டு அழுத்தங்களால், அமெரிக்க வெள்ளைமாளிகை ஜுலை 31ஆம் நாள் அமெரிக்க பங்குச் சந்தை தொடங்கும் முன்பு பேச்சுவார்த்தை நடத்தும் தகவலை வெளியிட்டது. இந்த இலக்கு தெளிவானது.

மூன்றாவதாக, அமெரிக்காவின் தந்திரத்தில் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், சீனாவின் வளர்ச்சிப் பாதையை மாற்றும் எண்ணமும் உள்ளது.

இறையாண்மை உடைய எந்த நாட்டிற்கும் சொந்தமான முறையில் வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்யும் உரிமை உண்டு. அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர், சீனாவின் நெடுநோக்கு வளர்ச்சித் திட்டத்தை மாற்ற முடியாது.

சமத்துவம்,   ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் அனைத்து பேச்சுவாத்தைகளும் நடத்தப்பட வேண்டும். ஆனால், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துமென்று கூறும் அதேசமயத்தில், இடைவிடாமல் அழுத்தம் கொடுத்த வருகிறது. அத்தகைய தந்திரம், பேச்சுவார்த்தையின் சூழ்நிலையைச் சீர்குலைத்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்க்க விரும்பினால், அமெரிக்கா அதன் அச்சுறுத்தலை நிறுத்தி, நல்லெண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்