நிதி வட்டி விகிதத்தை நிலைநிறுத்தும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி

இலக்கியா 2018-08-02 09:41:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க ஃபெடரல் நிதி வட்டி விகிதத்தை, 1.75 விழுக்காடு முதல் 2 விழுக்காடு வரையான அளவில் நிலைநிறுத்துவதாகவும், இது சந்தை எதிர்பார்ப்புக்குப் பொருந்தியதாகவும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் முதல் நாள் அறிவித்தது. அதே வேளையில் படிப்படியாக வட்டியைத் தொடர்ந்து அதிகரிக்கப் போவதாகவும் அது வலியுறுத்தியது.

2015ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் முதல், நிதி நெருக்கடி ஏற்பட்ட பின் வெளியிடப்பட்ட தளர்ச்சியான நாணயக் கொள்கையிலிருந்து படிப்படியாக விலகும் வகையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி 7 முறை வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனிடையில் கையிருப்பு மற்றும் கடனைக் குறைக்கும் திட்டத்தை அது துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்