யேமனில் வான் தாக்குதல்: அப்பாவி மக்கள் பலர் பலி

வாணி 2018-08-03 10:30:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

யேமனின் ஹொதைடா மாநிலத்தின் சுகாதார வாரியம் 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, சவுதி அரேபியா தலைமையிலான பன்னாட்டுப் படை அம்மாநிலத்திலுள்ள ஒரு சந்தையின் மீது வான் தாக்குதல் தொடுத்தது. இதில் 52 பேர் பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஹொதைடா மாநிலத்தைத் திரும்ப பெறும் வகையில், இவ்வாண்டின் ஜுன் திங்கள் 13ஆம் நாள் முதல் யேமன் அரசுப் படை பெரும் அளவிலான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளத் துவங்கியது. ஹொதைடா துறைமுகம் சிவப்புக் கடல் கரையோரத்தில் அமைந்துள்ளது. யேமன் ஹுட்டி ஆயுதப் பிரிவு வெளிப்புற உலகத்துடன் தொடர்பு கொள்ளும் முக்கிய பாதையாக இது திகழ்கின்றது. இது மட்டுமல்ல, ஹுட்டி ஆயுதப் பிரிவு கட்டுப்படுத்தியுள்ள பிரதேசத்துக்கு சர்வதேச சமூகம் மனித நேய உதவி வழங்குவதற்கான ஒரேயொரு நுழைவாயிலாகவும் இது உள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்