கிம் ஜுன்உனுக்கு டிரம்பின் பதில் கடிதம்

வாணி 2018-08-03 10:33:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய தலைவர் கிம் ஜுன் உன்னின் கடிதத்தை அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளதாகவும், அதற்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சான்ட்ரஸ் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடிதத் தொடர்பில் சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதியை இரு தலைவர்களும் மீளாய்வு செய்தனர். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை உருவாக்கும் வகையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதெனவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர் என்று சான்ட்ரஸ் கூறினார்.

மேலும், கொரியப் போரில் உயிரிழந்த அமெரிக்க படைவீரர்களின் உடல்களை வட கொரியா அண்மையில் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பியதற்கு அவர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்