சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கான காரணங்கள்

மதியழகன் 2018-08-09 10:35:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கான காரணங்கள்

3,400 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 25 விழுக்காடு கூடுதல் சுங்க வரி விதித்த பிறகு, மறுபடியும் 1,600 கோடி டாலர் சீனப் பொருட்களின் மீது  25 விழுக்காடு கூடுதல் சுங்க வரி வசூலிப்பதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் ஆகஸ்டு 7ஆம் நாள் அறிவித்தது. அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகுப் பதிலடியாக, 1,600 கோடி டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு 25 விழுக்காடு கூடுதல் சுங்க வரி விதிக்க சீனா புதன்கிழமை முடிவெடுத்துள்ளது.

“அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை”கருத்தில் கொண்டு, உற்பத்தித் தொழில்களை மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பச் செய்து, அமெரிக்கனர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதைக் காரணமாக கொண்டு அமெரிக்கா, வர்த்தகப் போரைத் தொடுத்துள்ளது. ஆனால், இப்போரின் உண்மையான விளைவு முற்றிலும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த முறை 1600 கோடி டாலர் சீனப் பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்து, அமெரிக்க வர்த்தகப் பிரிதிநிதிகள் அலுவலகம் நடத்திய விவாதக் கூட்டத்தில், 82 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இறுதியில், அவர்களில் 6 பேர் மட்டும் வரி வசூலிப்பதற்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க அரசு உறுதியுடன் கூடுதல் வரி விதிக்க முடிவெடுத்தது. அதன் காரணம் என்ன?

அமெரிக்க அரசைப் பொருத்த வரை, சுங்க வரி வசூலிப்பதன் மூலம், சீனாவின் வளர்ச்சியைத் தடுத்து, அமெரிக்காவுக்கு முதலிடம் என்ற தகுநிலையை நிலைநிறுத்த விரும்புவதோடு மற்றொரு ரகசியத்தையும் கொண்டுள்ளது.

இவ்வாண்டு மே திங்கள் வரை, எஃகு உற்பத்திப் பொருட்கள் மீதான கூடுதல் சுங்க வரியை குறைப்பது தொடர்பாக, தொழில்நிறுவனங்களில் இருந்து அமெரிக்க வணிக அமைச்சகத்துக்கு 20 ஆயிரம் மனுக்கள் அறுப்பப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவின் மிகப் பெரிய இரண்டு இரும்பு உருக்கு ஆலைகள், தேசியப் பாதுகாப்பு, உள்நாட்டு இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியை அதிகரிப்பது ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டுள்ளதால், அமெரிக்க அரசு பல நூறு தொழில் நிறுவனங்களின் மனுவை வேண்டுமென்றே மறுத்துள்ளதாக, உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதில், அமெரிக்க அரசின் உயர்நிலை அதிகாரிகள் சிலருக்கும் இரும்பு மற்றும் எஃகு தொழில்துறைக்கும் நெருக்கான தொடர்பு உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கான காரணங்கள்

சுங்க வரியை உயர்த்துவது, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு நன்மையைத் தருமா என்ற கேள்விக்கு, அமெரிக்க அரசின் அதிகாரிகள் இதுவரை உறுதியான பதிலினை அளிக்கவில்லை. இருப்பினும், கூடுதல் வரி விதிப்பது மூலம் அரசு அலுவலர்கள் நன்மை பெறப்போவது என்பது உறுதி.

ஆனால், சமீப காலமாக, அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் பற்றிய மோசமான தகவல்கள் அடுத்தடுத்து எழுந்துள்ளன. அமெரிக்காவின் எலிமென்ட் எலெக்ட்ரனிக்ஸ் நிறுவனம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தென் கரோலினா மாநிலத்திலுள்ள தன் தொழிற்சாலையை மூடவுள்ளதாக, 6ஆம் நாள் அறிவித்துள்ளது.

உலக நாடுகளின் வாகனங்களுக்கு 25 விழுக்காடு கூடுதல் சுங்க வரி விதித்தால், அதனால் அமெரிக்காவில் சுமார் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் தொழிலாளர்கள்  1 முதல் 3 ஆண்டுகளுக்குள் வேலை இழப்பர். பிற நாடுகள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டால், 6 இலட்சத்து 24ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழப்பர் என்று பீட்டெர்சன் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில், கோகோ கோலா, வாகனம், ஆடை போன்ற நுகர்வுப் பொருட்களின் விலை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு என்ற நிழலில் உயர்ந்து வருகிறது.  அமெரிக்க அரசின் தற்போதைய வர்த்தகக் கொள்கையால், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வர்த்தகப் போரின் விளைவைப் போல அமெரிக்காவின் நுகர்வோருக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க மெரில் லின்ச் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்