அமெரிக்காவின் ஒரு தரப்புத் தடை நடவடிக்கைக்கு எதிர்ப்பு:சீனா

இலக்கியா 2018-08-11 15:54:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான் மீது ஒரு தரப்புத் தடை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 10ஆம் நாள் கூறுகையில், ஒரு தரப்புத் தடை நடவடிக்கைகளை சீனா எப்போதும் எதிர்க்கிறது என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தான், சரியான வழிமுறை என்றும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்புகள், சமத்துவம், பரஸ்பர மதிப்பு ஆகியவை வாய்ந்த கோட்பாட்டுடன், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் சர்ச்சையைத் தீர்த்து, பிரதேசம் மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டுமென்று சீனா விரும்புவதாக லூ காங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்