சீன-அமெரிக்க வர்த்தக மோதலில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மீன்பிடித் தொழில்

வாணி 2018-08-11 16:35:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கூடுதல் வரி வசூலிப்புப் பட்டியலில் மீன் வகைகளை அமெரிக்கா சேர்த்தால், சொந்த நாட்டின் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும் என்று வாஷிங்டன் போஸ்ட் 10ஆம் நாள் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

மனித ஆற்றல் குறைவு, செலவு உயர்வு முதலிய காரணங்களால், கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்காவின் அதிகமான கடல் மீன் வகைகள் சீனாவுக்கு அனுப்பப்பட்டு, பதப்படுத்தப்பட்ட பிறகு அமெரிக்காவுக்குத் திரும்ப ஏற்றிச்செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் வளர்ந்த மீன் வகைகளே ஆகும். இவற்றின் மீது வரியை அதிகரித்தால், நடுத்தர மற்றும் சிறிய மீன்பிடித் தொழில் நிறுவனங்களும் பெரிய மீன் வகை பதப்படுத்தல் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டும் என்று இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்