அமெரிக்க வேளாண்துறைக்குக் கடும் பாதிப்பு:வர்த்தக போர்

இலக்கியா 2018-08-12 15:59:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வேளாண்துறை அமைச்சகம் 10ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சோயா அவரை மற்றும் மக்காச்சோள விளைச்சல் அளவு, புதிய பதிவை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு சோயா அவரையின் கையிருப்பு அளவு, வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வர்த்தக நிலைமை தீவிரமாகி வருவது, அமெரிக்க வேளாண்துறையைக் கடுமையாகப் பாதிக்குமென அந்நாட்டின் பண்ணை உரிமையாளர்களில் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவிலிருந்து சோயா அவரை இறக்குமதி செய்யும் மிகப் பெரிய நாடாக சீனா திகழ்கிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவின் சுமார் மூன்றில் ஒரு பகுதியான சோயா அவரை, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்