ஜப்பானிலுள்ள அமெரிக்க ராணுவத் தளம் இடம்மாறுவதற்கு மக்கள் எதிர்ப்பு

வாணி 2018-08-12 16:24:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பானின் புடென்மா விமான நிலையத்திலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை ஹெனொகு பிரதேசத்துக்கு இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒக்கினாவாகென் மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ஜப்பானிய மக்கள் 11ஆம் நாள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைப் பிரிவு ஹெனொகுவில் புதிய தளத்தைக் கட்டியமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, புடென்மா விமான நிலையத்திலுள்ள ராணுவத் தளத்தையும் உடனடியாக மூடிவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

· அதே நாளில், ஹொக்காய்டு, ஓசாக்கா, நகோயா முதலிய பிரதேசங்களிலுள்ள மக்களும் ஆர்ப்பாட்டம் அல்லது ஊர்வலம் நடத்தி, ஹெனொகு பிரதேசத்தில் அரசு மேற்கொண்டு வரும் கடல் பகுதியை நிலமாக மாற்றும் கட்டுமானத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்