சர்வதேச அளவில் குறையும் அமெரிக்காவிந் நம்பகத்தன்மை

மோகன் 2018-08-13 10:19:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச அளவில் குறையும் அமெரிக்காவிந் நம்பகத்தன்மை

துருக்கி நாணய மதிப்பிறக்கத்தின் அடிப்படையில், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியத்திற்கான சுங்க வரியை முறையே 50 மற்றும் 20 விழுக்காடாக உயர்த்துவது என அமெரிக்கா 10ஆம் நாள் முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் குறையும் அமெரிக்காவிந் நம்பகத்தன்மை

டொனல்ட் டிரம்ப் அமெரிக்க அரசுத் தலைவராக பதவியேற்ற 4ஆவது நாளில், பல ஆண்டுகள் பேச்சுவார்த்தை மூலம் 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய டி.பி.பி எனப்படும் பசிபிக் பெருங்கடலில் கடந்த கூட்டாளியுள்ள உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில், உலகளவில் உருவாக்கப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையிலிருந்தும் அமெரிக்கா விலகியது. 2015ஆம் ஆண்டு ஜூலை திங்கள் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் உருவாக்கிய ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா சீர்குலைத்தது. அத்துடன், இவ்வாண்டு மே திங்கள், அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் போரைத் தற்காலிகமாக நிறுத்துவது பற்றிய உடன்படிக்கையை உருவாக்கிய சுற்று நேரத்துக்கு பின், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியை அதிகரிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் இந்நடவடிக்கைகள் அந்நாட்டின் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் குறையும் அமெரிக்காவிந் நம்பகத்தன்மை


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்