2019-ம் ஆண்டின் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதா

தேன்மொழி 2018-08-14 15:54:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க செனெட் அவையும் பிரிதிநிதி அவையும் ஏற்றுகொண்டுள்ள 2019 நிதியாண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவில், அந்நாட்டின் அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 13-ஆம் நாள் கையொப்பமிட்டார். இதில், மொத்த ராணுவச் செலவு 71ஆயிரத்து 630கோடி அமெரிக்க டாலராகும். ஆப்கானிஸ்தான் போர் மற்றும் ஈராக் போருக்குப் பின், இது மிக அதிக அளவாகப் பதிவாகியுள்ளது.

ரஷியாவுடன் இராணுவ ஒத்துழைப்பைத் தடை செய்வதோடு, அமெரிக்காவுக்கான வெளிநாட்டு முதலீடு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா இல்லையா என்பது பற்றிய சோதனையை வலுப்படுத்த வேண்டும் என்று இம்மசோதாவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இணையப் பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது, ஐரோப்பியாவிலுள்ள அமெரிக்க இராணுவப் பரவலை விரிவாக்குவது முதலியவையும், இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்